இந்தியா

மோடி அரசின் 3 சாதனைகள்: பட்ஜெட்டில் ஜேட்லி பட்டியல்

செய்திப்பிரிவு

மத்தியில் மோடி அரசின் மூன்று சாதனைகளை, பொது பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்டியலிட்டார்.

2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள்:

ஜேட்லி தனது பட்ஜெட் உரையில், மத்திய அரசின் மூன்று சாதனைகளைப் பட்டியலிட்டார். அதன் விவரம்:

1. ஜன் தன் (வங்கிக் கணக்கு) திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 12.5 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

2. நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள மாநிலங்கள் பயனடையும் வகையில் ஏலம் முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

3. 'தூய்மை இந்தியா' திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-15-ல் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்

மேலும் அவர் கூறும்போது, "இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மொத்த பண வீக்கம், நடப்பு கணக்குப் பற்றாக்குறை குறைந்துள்ளது" என்றார் அருண் ஜேட்லி.

SCROLL FOR NEXT