இந்தியா

ராஜஸ்தான் முன்னாள் முதல்வருக்கு பன்றிக்காய்ச்சல்

பிடிஐ

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அசோக் கெலாட் கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பரிசோதனையில் எனக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உரிய நேரத் தில் சிகிச்சையை தொடங்கியதால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது தனிச் செயலாளர் கூறும்போது, “கெலாட் டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். டெல்லியிலிருந்து திரும்பியவுடன் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தற்போது தனது வீட்டிலேயே சிகிச்சை எடுத்துவருகிறார்” என்றார். ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு புத்தாண்டில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT