ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கத்தின் (பிஎம்எஸ்) சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே, தொழிலாளர்கள், சாமானிய மனிதன், கீழ் நடுத்தர வகுப்பினர், உழவர்கள், கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் உள்ளிட்டவர்கள் மத்திய அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
சமுதாயத்தில் பின்தங்கி உள்ள மக்களின் நலனைப் புறக்கணித்து விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே மத்திய அரசு கொள்கைகளை வகுக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த வெளி நாடுவாழ் இந்திய ஆலோசகர்களை அதிகாரமிக்க பதவியில் அமர்த்தி வருகிறது. இதற்கு நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர், பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகிய பதவிகளை உதாரணமாகக் கூறலாம். அதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.
இப்போது உயர் பதவியில் அமர்த் தப்பட்டிருப்பவர்களில் சிலர், உலகப் பொருளாதாரம் மந்த நிலைக்குச் சென்றபோது அமெரிக்காவில் திவா லான நிதி நிறுவனங்களுக்கு ஆலோ சகர்களாக இருந்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தொழிலாளர் நல சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
மேலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத் தங்களை மேற்கொள்ள திட்டமிட் டுள்ளது. இது நில உரிமையாளர்களின் நலனை பாதிக்கும். பொருளாதார சீரழிவுக்கு வழிவகுக்கும். அந்நிய நேரடி முதலீட்டை ஊக்கு விக்க வேண்டும் என்ற நோக்கத் திலேயே இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நல்லதல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு ஆதரவாக செயல்படு வதை நிறுத்திக் கொள்ள வலியுறுத்தி யும் பிஎம்எஸ் பொதுச்செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாய் பிரதமருக்கும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.
இந்தக் கோரிக்கை ஏற்கப் படாவிட்டால், வரும் 26-ம் தேதி முதல் நாடு முழுவதும் சத்தியகிரகப் போராட்டம் நடத்த பிஎம்எஸ் திட்டமிட்டுள்ளது.