இந்தியா

ரயில்வே பட்ஜெட் 2015: என்ன எதிர்பார்க்கலாம்?

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், நவீனப்படுத்துதல், எரிபொருள் சேமிப்பு உள்ளிட்ட சில அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1.கழிவுகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டங்கள் ஊக்குவிக்கப்படலாம்.

2.ரயில்களை இயக்க சி.என்.ஜி. எனப்படும் எரிபொருள் பயன்பாடு ஊக்குவிக்கப்படும் எனத் தெரிகிறது.

3.ரயில்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மாற்று எரிபொருள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது ரயில்வே அமைச்சரின் விருப்பங்களுள் உள்ளது.

4.ரயில்வே இருப்புப் பாதைகளுக்கு அருகாமையிலேயே காற்றாலை நிறுவி அதன் மூலம் மின்சாரம் தயாரிப்பது போன்ற சூழல் நட்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில்வே பட்ஜெட்டில் தனியாக ஒரு உள்ளடக்கப் பிரிவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

5. கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரித்து அதை பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம்.

6. ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள், நடைமேடைகளில் விளக்குகள், காற்றாடிகளை இயக்க சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்த முடிவு. அதற்கேற்ப சூரிய மின் உற்பத்தி நிறுவனங்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம்.

7. ரயில் பெட்டி உற்பத்தி நிலையங்கள் தரம், ரயில்வே தொழிலாளர்கள் பாதுகாப்பு ஆகியனவற்றிற்கு தர நிர்ணயச் சான்று வழங்கும் வகையில் புதிய ஒருங்கிணைந்த மேலாண்மை வாரியம் நிறுவப்படலாம்.

8. ரயில் பெட்டிகளுக்குள் ஓசை கேட்காமல் இருக்கும் வரையில் நவீன பெட்டிகள் தயாரிப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9. ரயில்வே துறையில் 'மேக் இன் இந்தியா திட்டத்துக்கு' முக்கியத்துவம்

10. ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு.

மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டான இது அவரது நிர்வாகத் திறமையை மதிப்பிடுவதற்கான அளவுகோலாகவும் இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT