திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீபத்மநாப சுவாமி கோயிலிலிருந்து சுமார் 266 கிலோ தங்க நகைகள் காணாமல் போயிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அரசு தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இதன் முக்கிய தகவல்கள் ஊடகங்களுக்கு கிடைத்துள்ளன.
பல்வேறு பணிகளுக்காக கொடுக்கப்பட்ட 893 கிலோ நகைகளில் 627 கிலோ நகைகள் மட்டுமே கோயிலில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலின் கணக்குகளையும் சொத்துகளையும் தணிக்கை செய்யும்படி கடந்த ஆண்டு வினோத் ராயை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.