இந்தியா

மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லை: ஆம் ஆத்மி

ஐஏஎன்எஸ்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லை என்று டெல்லியில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் கிரேட்டர் கைலாஷ் தொகுதி வேட்பாளர் சவுரவ் பரத்வாஜ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கூறுகையில், “மத்திய அரசுடன் ஒத்துப்போவதே எங்கள் உத்தி.”என்றார்.

மேலும் ஆம் ஆத்மியின் வெற்றி பற்றி கூறும்போது, “கேஜ்ரிவால் தேர்தலுக்கு நல்ல தயாரிப்புடன் இருந்தார், மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்தனர்” என்றார்.

"மக்கள் எங்களது 49 நாட்கள் முந்தைய ஆட்சியை, மத்தியில் உள்ள பாஜக ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர். பாஜக, ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்காக வேலை செய்கிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். அதனால்தான் எங்களை நோக்கி வந்துள்ளனர்.” என்றார் சவுரவ் பரத்வாஜ்.

கிரண் பேடி தோல்வி பற்றி கூறும்போது, “நாங்கள் அவர் வெற்றி பெற்று எங்களுடன் சட்டமன்றத்தில் விவாதத்தில் ஈடுபடவே விரும்பினோம்.” என்றார்.

SCROLL FOR NEXT