இந்தியா

நேர்மையான ஆட்சி அமைய மக்கள் வாக்களித்துள்ளனர்: மனிஷ் சிசோதியா

செய்திப்பிரிவு

டெல்லி தேர்தல் வெற்றி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான மனிஷ் சிசோதியா தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியதாவது: டெல்லியில் நேர்மையான ஆட்சி மலர வேண்டும் என மக்கள் விரும்பினர்.

அத்தகைய நேர்மையான ஆட்சி அமைய அவர்கள் வாக்களித்துள்ளனர். டெல்லியை வழிநடத்த எங்களிடம் சிறந்த தலைமை இருக்கிறது. டெல்லி மேம்பட கட்சியிடம் ஒரு தொலைநோக்குத் திட்டமும் உள்ளது.

அதை செயல்படுத்துவோம். கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டதைவிட தேர்தலில் ஆம் ஆத்மி அதிக இடங்களைக் கைப்பற்றுவோம் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT