இந்தியா

வசதி படைத்தோர் சிலிண்டர் மானியம் பெறுவதை கைவிட வேண்டும்: ஜேட்லி

செய்திப்பிரிவு

நேரடி மானிய திட்டத்தில் பயனடைந்து கொண்டிருக்கும் வசதி படைத்தோர் மானிய உரிமையை கைவிடுமாறு அருண் ஜேட்லி வேண்டுகோள் விடுத்தார்.

2015-16 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார்.

அப்போது ஏழை மக்களுக்காக வழங்கப்படும் மானியங்கள் உரிய மக்களுக்கு சென்றடைவது அவசியம் என்றார்.

"நேரடி மானிய திட்டம் உரிய மக்களை சென்றடைவதை உறுதி செய்யவே பயனாளிகளின் செல்போன் எண்கள் ஆதார் ஆட்டை எண்ணுடன் இணைத்து கணக்கில் கொள்ளப்படுகிறது.

மானிய திட்டங்கள் ஏழை மக்களுக்கு அவசியமானவை. இதனால் இந்த திட்டத்தில் பயனடைந்து கொண்டிருக்கும் வசதி படைத்தோர் தங்களது மானிய உரிமையை கைவிட வேண்டும்" என்று ஜேட்லி வேண்டுகோள் விடுத்தார்.

SCROLL FOR NEXT