இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரியை சந்தித்தார் ராஜ்நாத் சிங்

செய்திப்பிரிவு

ஆந்திர மாநில முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான என்.டி.திவாரியை இன்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னெள தொகுதியில் போட்டியிடுகிறார் ராஜ்நாத் சிங். இந்நிலையில் அம்மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்த என்.டி.திவாரியை சந்தித்தார் ராஜ்நாத் சிங்.

சந்திப்பின் போது ராஜ்நாத் சிங், என்.டி.திவாரி காலில் விழுந்து ஆசி பெற்றதாக தெரிகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், "உ.பி. மாநில சட்டமன்றத்தில் ஒரு முறை நான் உரையாற்றினேன். அப்போது என்.டி.திவாரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்தார். நான் என் உரையை முடித்ததும் என்னை அழைத்த அவர் உ.பி. மாநிலத்தின் எதிர்காலம் நீதான். அதை இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன்" என்றார்.

SCROLL FOR NEXT