இந்தியா

போலி என்கவுன்ட்டர் வழக்கு: குஜராத் முன்னாள் டிஜிபி விடுவிப்பு

செய்திப்பிரிவு

சொராபுதீன் ஷேக் கூட்டாளி துளசி ராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து குஜராத் மாநில முன்னாள் காவல் துறை தலைவர் பி.சி.பாண்டேவை மும்பை சிபிஐ நீதிமன்றம் நேற்று விடுவித்தது.

பாண்டே மீது வழக்கு தொடர மாநில அரசின் அனுமதி பெறப் படாததால் அவர் விடுவிக்கப் படுவதாக சிபிஐ நீதிமன்ற நீதிபதி எம்.பி.கொசாவி தெரி வித்தார்.

கடந்த மாதம் பாஜக தலைவர் அமித் ஷாவை சொராபுதீன் ஷேக் மற்றும் பிரஜாபதி வழக்குகளிலிருந்து சிபிஐ விடுவித்தது.

கடந்த 2005-ல் நிகழ்ந்த போலி என்கவுன்ட்டரில் சொராபுதீன் கொல்லப்பட்டதைப் பார்த்த நேரடி சாட்சி பிரஜாபதி. அதனால் இவரை ஒழித்துக்கட்டுவதற் கான சதித் திட்டம் தீட்டியதில் குஜராத் காவல் துறை முன்னாள் தலைவர் பாண்டேவுக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.

SCROLL FOR NEXT