இந்தியா

பாஜக கூட்டணிக்கு திரும்பும் திட்டமில்லை: நிதிஷ் குமார்

செய்திப்பிரிவு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பும் எண்ணமில்லை என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சியுடன், ஐக்கிய ஜனதாதள கட்சி கூட்டணி அமைக்கலாம் என அக்கட்சித் தலைவர் சரத் யாதவ் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், தான் அப்படி கூறவில்லை என சரத் யாதவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை நிதிஷ் குமாரும் வலியுறுத்தியுள்ளதோடு, பாஜக, காங்கிரஸ் அல்லாத ஒத்த கருத்துடைய மாநில கட்சிகள், இடது சாரி கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் உள்ளதாக தெரிவித்தார். இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் மாநிலக் கட்சிகளுடன் நடைபெற்று வருவதாகவும் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரசை எதிர்கொள்ள கருத்து ஒற்றுமை, நல்லிணக்கம் அடிப்படையில் ஒரு அணி உருவாகும் என நிதிஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படலாம் என்ற பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய போதே, 17 ஆண்டுகளாக நிலவி வந்த பாஜகவுடனான கூட்டணியை நிதிஷ் குமார் முறித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT