இந்தியா

ஆந்திராவில் பெண் எம்.பி.க்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு

ஜி.நரசிம்மராவ்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மக்களவை எம்.பி. அராகு கோத்தபள்ளி கீதாவுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கம் அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு நாளும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநில அராகு மக்களவை தொகுதி எம்.பி. கீதாவுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கீதாவின் ரத்தம், சளி மாதிரிகள் ஹைதராபாத்துக்கு அனுப்பட்டிருந்தது. இன்று காலை பரிசோதனை முடிவுகள் வெளியாகின.

இதன் அடிப்படையில், கீதாவுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்யப்படுவதாக மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி ஜெ.சரோஜினி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்லியில் இருந்து ஹைதராபாத் திரும்பிய கீதா தனக்கு பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிப்பதாக கூறி குயின்ஸ் என்.ஆர்.ஐ மருத்துவமனையில் சேர்ந்தார்.

தற்போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கம் உறுதி செய்யப்பட்டதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நலன் முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT