இந்தியா

ஆர்.எஸ்.எஸ். தாளத்துக்கு ஆடும் பாஜக: சோனியா பேச்சு

செய்திப்பிரிவு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இசைக்கும் தாளத்துக்கு ஏற்ப பாஜக ஆடுகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மொராதா பாதில் திங்கள்கிழமை பேசிய அவர், பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் மறைமுகமாக குற்றம் சாட்டி னார். அவர் பேசியதாவது:

மக்களுக்காக உயிர் தியாகம் செய்த மகாத்மா காந்தி, மவுலானா ஆசாத் ஆகியோர் வழிநடத்திய காங்கிரஸும் மற்றொருபுறம் நாட்டை பிளவுபடுத்த துடிக்கும் சக்தியும் தேர்தலைச் சந்திக்கின்றன.

சமூகத்தைப் பிளவுபடுத்த நினைக்கும் அமைப்பின் தாளத்துக்கு ஏற்ப ஓர் அரசி யல் சக்தி ஆடுகிறது. அவை இரண் டும் நாட்டின் மிக நீண்ட கால மாக காப்பாற்றப்பட்டு வந்த பாரம் பரியத்தை உடைத்தெறிந் துள்ளன. அந்த சக்திகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன.

அவற்றின் சித்தாந்தம் நாட்டுக் கும் நாட்டு மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்துபவை. காங்கிரஸால் மட்டுமே மத்தியில் ஸ்திரமான நல்லாட்சியை வழங்க முடியும்.

சிறுபான்மையினர் நலனுக்காக தனித் துறையை ஏற்படுத்தியது காங்கிரஸ் அரசுதான். தேசிய வக்பு மேம்பாட்டுக் கழகத்தை அமைத்ததும் காங்கிரஸ்தான்.

இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

SCROLL FOR NEXT