இந்தியா

ஏழைகளுக்கு ரூ.12 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு

செய்திப்பிரிவு

ஏழை மக்களுக்கு ரூ.12 பிரீமியம் தொகையில், ரூ.2 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2015-16 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார்.

ஜேட்லி தனது பட்ஜெட் உரையில், "பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு ரூ.1 பிரிமீயம் தொகை செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலான காப்பீட்டை பெற முடியும்.

மேலும், ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் விபத்து காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு ரூ.12 மட்டுமே பிரிமீயம். ஏழை மக்களுக்காக இந்த விபத்துக் காப்பீடு அறிமுகப்படுத்தப்படுகிறது" என்றார் அருண் ஜேட்லி.

இந்த பட்ஜெட் குறித்து ட்விட்டரில் விவாதங்களும் கருத்துகளும் குவிந்து வரும் நிலையில், ரூ.12 பிரீமியத்தில் விபத்துக் காப்பீடு திட்டம் சமூக வலைதளங்களில் இணையவாசிகளால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை வரவேற்று கருத்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

SCROLL FOR NEXT