எந்தப் பூசலையும் பேச்சுவார்த்தை, அதிகாரப் பகிர்வு, அன்பு மூலம் தீர்க்கலாம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
அசாமில் டான் பாஸ்கோ பல் கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி நேற்று கலந்துரை யாடினார். அப்போது, “மணிப் பூரில் ஆயுதப்படை சிறப்பு அதி காரங்கள் சட்டங்கள் திரும்பப் பெறப்படுமா? இங்கு சமூக ஒற்றுமை பாதிக்கப்படுவதால் பெண்களும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்” என்றார் ஒரு மாணவர்.
இதற்கு ராகுல் பதில் அளிக் கையில், “மகாத்மா காந்தியிட மிருந்து உத்வேகம் பெற்றவன் நான். எந்தவொரு பூசலுக்கும் பேச்சுவார்த்தை, அதிகாரப் பகிர்வு, அன்பு மூலம் தீர்வு காணலாம்.
பேச்சுவார்த்தை நடத்தாமல், மக்கள் மீது பலத்தை பிரயோகித்து பிரச்சினைகளை தீர்க்க முடியாது. மக்கள் தங்களின் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க அவர் களுக்கு அதிகாரம் வேண்டும். எனவே இளைஞர்களுக்கும் மக்களுக்கும் அதிக அதிகாரம் வழங்கப்படவேண்டும்.
அசாமில் இருப்பது போலவே மணிப்பூரிலும் காணப்படும் இப் பிரச்சினைக்கு நம்மால் தீர்வுகாணமுடியும், அதை விரைந்து பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார் ராகுல்.
ராகுல் மேலும் கூறுகையில், “மக்களுக்கு போதிய அளவு அதிகாரம் வழங்கப்படாததே நாட் டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் என்று நான் கருதுகிறேன்.
கடந்த 20 ஆண்டுகளில் அசாமில் நிலைமை மேம்பட்டுள்ளது. மக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு கண்டதே இதற்கு காரணம்.
இந்தியாவை மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாற்றப் போவதாக சிலர் கூறுகிறார்கள். மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாற்றுவதில் என்ன இருக்கிறது? ஒரு பெண் பஸ்ஸில் பத்திரமாக பயணம் செய்வதை என்னால் உறுதிப்படுத்த முடியும். ஒரு இளம்பெண் பஸ்ஸில் பயணம் செய்ய பயந்தால் நம்மை மிகப்பெரிய பொருளாதார சக்தி என்று நாம் எவ்வாறு கூறிக்கொள்ள முடியும்?
நாட்டில் 50 சதவீதம் பேர் பெண்கள். அவர்கள் தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக உணரவில்லை. நமது அரசியல் அமைப்பில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. பெண்கள் ஒவ்வொரு நாளும் மோசமாக நடத்தப்படுகிறார்கள். பணியிடங்களில் அவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள், திறமையானவர்கள் என்பதே என் கருத்து. இவர்களை நாடு முழுவதும், எந்நேரமும் அவமதிக்கும் நாம், மிகப்பெரிய பொருளாதார சக்தி ஆவது பற்றி பேசுகிறோம் என்றார் ராகுல்.
குவஹாத்தி அருகில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா கோயிலில் ராகுல் காந்தி நேற்று வழிபட்டார். மாநில முதல்வர் தருண் கோ கோய், மாநில காங்கிரஸ் தலைவர் புவனேஸ்வர் காலிதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.