இந்தியா

ராம் விலாஸ் பாஸ்வானுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு

செய்திப்பிரிவு

பாஜக மூத்த தலைவர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, ரவிசங்கர் பிரசாத், ஷானவாஸ் ஹுசேன் ஆகியோர் லோக் ஜன சக்திக் கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

லோக் ஜன சக்தி - பாஜக கூட்டணி, தொகுதி உடன்பாடு ஆகியன குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக் ஜன சக்தி நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி தெளிவான நிலைப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இன்றைய சந்திப்பு முழுக்க முழுக்க தொகுதிப் பங்கீட்டுல் இறுதி முடிவு எட்டுவதற்காகவே கூட்டப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT