ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் மற்றொரு பெண்ணுடன் பழகி உள்ளார். இந்தப் பழக்கத்தால் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முடிவு செய்துள்ளார். அதன்படி அவர், சில மாதங்களுக்கு முன்பு சிரியா நாட்டுக்குச் சென்று ஐஎஸ் அமைப்பிடம் 2 மாதங்கள் வரை பயிற்சி பெற்றுள்ளார்.
இதற்கிடையே, பயிற்சி பெற்ற பின்பு தன்னை சமையல் பிரிவில் சேர்த்ததால் அதிருப்தியடைந்த அந்தப் பெண், பெற்றோர் உதவியுடன் சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஹதராபாத் போலீஸார் அந்தப் பெண்ணிடம் நேற்று விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பேஸ்புக் மூலம் தீவிரவாத அமைப்பில் சேர சிரியாவுக்கு செல்ல இருந்த மேலும் 6 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். சிரியாவுக்கு போக வேண்டாம் என்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.