இந்தியா

கேஜ்ரிவாலுக்கு ‘இசட் பிரிவு பாதுகாப்பு

செய்திப்பிரிவு

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாண்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

டெல்லி தேர்தலில் வெற்றியடைந்துள்ளதால் கேஜ்ரிவால் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். சட்டப்படி, ஒரு மாநில முதல்வருக்கு எதிரிகளின் அச்சுறுத்தல் காரணமாக, 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது மரபு. அதே மரபு தற்போது அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுகுறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "கேஜ்ரிவாலுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். அதில் ஆயுதமேந்திய டெல்லி போலீஸ் கமாண்டோக்கள் 30 பேர் இருப்பார்கள். அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற நொடியில் இருந்து இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT