இந்தியா

அசாமில் தேடுதல் வேட்டை 7 தீவிரவாதிகள் கைது

செய்திப்பிரிவு

அசாம் மாநிலத்தில் இந்திய ராணுவத்தினரும், அசாம் மாநில போலீஸாரும் இணைந்து மேற் கொண்ட 16 மணி நேர தேடுதல் வேட்டையில் 7 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 70க்கும் மேற்பட்ட பழங்குடிகள் சில தீவிரவாத அமைப்புகள் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப் பட்டனர். அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து தீவிரவாத அமைப்புகளை முடக்க அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுமார் 16 மணி நேரத்துக்குப் பிறகு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அதன் பிறகு சுமார் 45 நிமிடங்களுக்கு இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. இறுதியில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள், பணம் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT