ரயில்வே பல்கலைக்கழகம் அமைப் பதற்கான நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியது: ரயில் வேயில் உள்ள அபரிமிதமான மனித வளத்தை முழுமையாக பயன் படுத்தவும், ஊழியர்களின் திறமை களை சர்வதேச தரத்துக்கு உயர்த் தவும் நடவடிக்கை எடுக்கப் படும். இதற்காக மனித வள மேம்பாட்டுத்துறைக்கு தனியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப் படுவார்கள். பயணிகளுடன் நெருங்கி பணியாற்றும் ரயில்வே ஊழியர்களின் அணுகுமுறையை மேம்படுத்த புதிய முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக ரயில்வேயில் உள்ள முக்கியமான ஊழியர்களுக்கு குறிப்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நாட்டில் 4 ரயில்வே பல் கலைக்கழகங்கள் அமைக்கப் படும் என்று இடைக்கால பட்ஜெட் டின்போது தெரிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.