இந்தியா

காஷ்மீரில் ஆட்சி பாஜக-பிடிபி பேச்சில் முன்னேற்றம்

பிடிஐ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) ஆகிய கட்சிகள் நடத்தி வந்த ஆலோசனை யில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ.க.வும், பி.டி.பி.யும் ஆலோசனை நடத்தி வந்தன. அப்போது சில விஷயங்கள் குறித்து இரண்டு கட்சிகளுக்கும் பொதுக்கருத்து ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த ஆலோசனை மேம்பட்ட கட்டத்தை அடைந்துள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை.

மீதமிருக்கும் சில விஷயங்கள் குறித்து இரு கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே அந்த மாநிலத்தில் முதல்வராக எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் பதவியேற்பார் என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். தற்போதைக்கு இந்த இரு கட்சிகளும் விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பரஸ்பரம் ஒன்றை ஒன்று ஆதரிக்க உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தர்.

டெல்லி தேர்தல் முடிந்தபிறகு காஷ்மீரில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்துத் தகவல் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT