இந்தியா

பன்றிக் காய்ச்சல்: மத்திய சுகாதார அமைச்சர் விளக்கம்

பிடிஐ

பன்றிக் காய்ச்சல், மூளை அழற்சி உள்ளிட்ட நோய் பாதிப்புகளைத் தடுக்க மத்திய அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நேற்று நட்டா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசும்போது, மேற்கண்ட நோய்களுக்குச் சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் நாடு முழுக்க கிடைக்கச் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதுதொடர்பாக, அனைத்து அதிகாரிகளும் விழிப்புடன் செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், மாநிலத்தின் பஸ்தி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT