சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரு நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது ஆச்சரியமாக உள்ளது.
நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் நிலத்துக்கு சொந்தக்காரர்களான விவசாயிகளின் ஒப்புதல் மிகவும் அவசியம். ஆனால், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்ட மசோதா, விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலேயே நிலம் கையகப்படுத்த வகை செய்கிறது.
இந்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கு முன்பே விவசாயிகளின் கருத்தை கேட்டு, அவர்களின் கவலையைப் போக்கியிருக்க வேண்டும். இதை சட்டமாக அங்கீகரித்தால் எதிர்காலத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.