நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை, நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் வலுவாக ஆதரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று காலை நாடாளுமன்ற கூட்டம் கூடுவதற்கு முன்னர் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை வலுவாக ஆதரித்து விவாதங்களை மேற்கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மக்களவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.