இந்தியா

ரூ.4.5 கோடி மதிப்புள்ள நடிகை ரம்பாவின் நகைகள் கொள்ளை

என்.மகேஷ் குமார்

நடிகை ரம்பாவுக்குச் சொந்தமான ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் ரொக்க பணமும் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதாக அவருடைய அண்ணன் ஹைதராபாத் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய பல்வேறு மொழிப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ரம்பா. இவருக்கு சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் சொந்தமாக வீடு, நிலம் போன்றவை உள்ளன. ரம்பா கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு தற்போது குடும்பத்துடன் டொரண்டோவில் வசித்து வருகிறார்.

இவருடைய ஹைதராபாத் வீட்டில் இவரின் சகோதரர் சீனுவாசன் வசித்து வருகிறார். சீனுவாசனின் மனைவி பல்லவி இவரை விட்டு பிரிந்து அவருடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம், ரம்பாவின் சகோதரர் சீனுவாசன், ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவித்தார். இந்த புகாரில், தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த ரம்பாவுக்கு சொந்தமான ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. எனது மனைவி மற்றும் அவருடைய வீட்டார் மீது சந்தேகம் உள்ளது. இவர்கள்தான் இதனை கொள்ளையடித்திருக்க வேண்டும். ஆகையால் இது குறித்து விசாரணை நடத்தி எங்களது நகை, பணம் ஆகியவற்றை மீட்டுத் தர வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT