இந்தியா

மே.வங்கத்தில் படகு கவிழ்ந்து 15 பேர் மாயம்

பிடிஐ

மேற்கு வங்க மாநிலத்தில் இயந்திரப் படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 15 பேர் மாயமாகி உள்ளனர்.

அம்மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி எனும் பகுதியில் பெட்லி ஆறு ஓடுகிறது. நஜத் பகுதியில் இருந்து சுமார் 35 பேருடன் கத்காளி பகுதியை நோக்கி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆற்றின் நடுவே திடீரென்று அந்தப் படகு கவிழ்ந்தது. அதில் பயணித்தவர்களில் சிலர் ஆற்றில் நீந்தி கரையை அடைந்தனர். சுமார் 15 பேர் காணவில்லை. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT