இந்தியா

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்

செய்திப்பிரிவு

டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஒரே கட்டமாக இன்று (சனிக்கிழமை) நடந்த வாக்குப் பதிவைத் தொடர்ந்து, பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதன் விவரம்:

என்.டி.டி.வி:

என்.டி.டி.வி. நடத்திய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 38 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 29 இடங்களும், காங்கிரஸுக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்:

டைம்ஸ் நவ் சேனல் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, ஆம் ஆத்மி 39-ல் இருந்து 43 இடங்களுடன் ஆட்சி அமைக்கும். பாஜக கூட்டணி 25-ல் இருந்து 29 இடங்கள் வரை கைப்பற்றும். காங்கிரஸுக்கு ஒன்றில் இருந்து 3 இடங்கள் வரை மட்டும் கிடைக்கும்.

இந்தியா டுடே:

இந்தியா டுடே குழுமம்- சியோரோ போஸ்ட் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 35 முதல் 43 இடங்கள் வரை கிடைக்கும். பாஜக 23-ல் இருந்து 29 இடங்கள் வரையில் கைப்பற்றும். காங்கிரஸுக்கு 3-ல் இருந்து 5 இடங்கள் வரை கிடைக்கும்.

ஏ.பி.பி.- ஏ.சி. நீல்சன்

ஏ.பி.பி. - ஏ.சி.நீல்சன் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி 39 இடங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றும். பாஜகவுக்கு 28 இடங்களும், காங்கிரஸுக்கு 3 இடங்களும் கிடைக்கும்.

நியூஸ் எக்ஸ்

நியூஸ் எக்ஸ் - சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில், ஆம் ஆத்மி 31-39 இடங்கள் வரை வெல்லும். பாஜக 27-ல் இருந்து 35 இடங்கள் வரை கைப்பற்றும். காங்கிரஸ் 2-ல் இருந்து 4 இடங்கள் வரை வெல்லும்.

SCROLL FOR NEXT