இந்தியா

மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை: சந்திரபாபு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன் தினம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனது குப்பம் தொகுதிக்கு சென்றார். அங்கு ரூ. 183 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

ஆந்திர மாநில பிரிவினை அவசர கோலமாக நடைபெற்று விட்டது. இதனால் பட்ஜெட்டில் துண்டு விழு கிறது. இதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு முழுமையாக தேவை. இல்லாவிட்டால் மாநில வளர்ச்சி பணிகள் பெரிதும் பாதிக்கும். தற் போது ஆந்திர நிதி பற்றாக்குறைக்கு மாநில பிரிவினை சட்டத்தின்படி ரூ. 22,113 கோடி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும், இதர செலவு களுக்கும் மட்டுமே போதுமானதாக இருக்கும். மாநிலத்துக்கு ரூ. 1,41,467 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைக் கப்பட்டது. தற்போது ரூ. 22,113 கோடி மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது முழு நிதியை வழங்கினால், வரும் பட்ஜெட்டில் பற்றாக்குறை இன்றி வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி ஒதுக்கலாம்.

தமிழகம், கர்நாடக மாநில எல்லைகளில் ஆந்திர மாநிலம் குப்பம் அமைந்துள்ளதால், அனைத்து துறையிலும் குப்பம் தொகுதியை வளர்ச்சி மிக்கதாக மாற்றுவேன். ஓராண்டுக்குள் குப்பம் பகுதியின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும். காட்டு யானைகளின் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT