இந்தியா

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மகா சிவராத்திரி கோலாகலம்

என்.மகேஷ் குமார்

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

பஞ்சபூத தலங்களில் வாயுதலமாக விளங்கும் ஸ்ரீகாளஹஸ்தியில் திங்கள்கிழமை நள்ளிரவு முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதிகாலை சிறப்பு அபிஷேகத்துக்குப் பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அரசு சார்பில் வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி சுவாமிக்கு சீர்வரிசை வழங்கினார்.

நேற்று காலையில் சப்பரத்தில் உற்சவர் களின் வீதியுலா நடைபெற்றது. இரவு அதிகார நந்தி வாகன சேவையும், இதைத் தொடர்ந்து நள்ளிரவு லிங்கோத் பவ தரிசனமும் சிறப்பாக நடைபெற்றது. இதேபோன்று இரு மாநிலங்களிலும் பல்வேறு சிவன் கோயில்களில் பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே திரண்டு வந்து வழிபட்டனர். கோயில்களின் அருகில் உள்ள நதிகளில் புனித நீராடியும் சுவாமியை தரிசித்தனர்.

SCROLL FOR NEXT