2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட்டை வாசித்த அருண் ஜேட்லி, பிஹார், மேற்குவங்க மாநிலங்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்றார். இந்த இரு மாநிலங்களிலும் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அரசு இந்த நடவடிக்கையை எடுப்பதாக கூறினார்.
முன்னதாக, நேற்று மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியும் பிஹார், மேற்குவங்க மாநிலங்களுக்கு கூடுதல் நிதியுதவி தொடர்பாக குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.