இந்தியா

பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி தோல்வி

செய்திப்பிரிவு

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட கிருஷ்ணா நகர் தொகுதியில், பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி தோல்வியடைந்தார். அங்கு ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

பா.ஜ.க.வின் கோட்டை என்று கிருஷ்ணா நகர் கருதப்பட்டு வந்தது. இது அக்கட்சியைச் சார்ந்த‌ ஹர்ஷ வர்தனின் தொகுதியாகும். ஆனால் இறுதி நேரத்தில் கிரண் பேடி பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எனவே, உதய் பார்க் பகுதியில் வசித்து வரும் அவருக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் இதே தொகுதியில் பிறந்து வளர்ந்தவர் எஸ்.கே.பக்கா ஆவார். வழக்கறிஞரும் சமூக சேவகருமான இவருக்கு இந்தத் தொகுதியில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி வாய்ப்பளித்தது.

இந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு இந்த ‘மண்ணின் மைந்தன் மற்றும் வெளியாள்' எனும் வித்தியாசம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இங்கு கிரண்பேடி சுமார் 2,200 வாக்குகள் வித்தியாசத்தில் பக்காவிடம் தோல்வியடைந்தார்.

SCROLL FOR NEXT