உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி: தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என சட்ட ஆணையத்தின் பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சட்ட அமைச்சகத்துக்கு இப்பரிந்துரை அனுப்பப்பட்டு, சட்டத் திருத்த வரைவு தயாரிக்கப்படும்.
நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த கேள்விகள், கோரிக்கைகளுக்கு நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதில் அளித்தனர்.