கேரள மாநிலத்தில் நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிலிருந்து மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் பாதியிலேயே வெளியேறினார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இந்தியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநில மாநாடு 4 நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மாநில செயலாளர் பினராய் விஜயன், மூத்த தலைவர்கள் கொடியேரி பாலகிருஷ்ணன்,வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மாநில செயலாலர் பினராய் விஜயன் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், அச்சுதானந்தன் மீது அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்திருந்தார். அச்சுதனந்தன் குறித்து தாக்கி பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தியடைந்த அச்சுதானந்தன் மாநில மாநாட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அவரைப் பின் தொடர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால், எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காமல், அச்சுதானந்தன் சென்றுவிட்டார்.
கட்சி மாநில மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.