இந்தியா

கேஜ்ரிவால் மீது ஹவாலா புகார் - பாஜகவின் சதியாக இருக்கலாம்: திக்விஜய்சிங்

பிடிஐ

அர்விந்த் கேஜ்ரிவால் மீதான ஹவாலா மோசடி குற்றச்சாட்டுக்கான பின்னணியில் பாஜகவின் சதித் திட்டம் இருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் ஒன்று கூடி, ஆம் ஆத்மி தன்னார்வ செயல்பாட்டுக் குழுவை (ஏவிஏஎம்) நிறுவி உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி, கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி நள்ளிரவில் போலியான 4 நிறுவனங்களின் பெயரில் தலா ரூ.50 லட்சம் நிதி பெற்றதாகவும் அந்தப் பணம் சட்டவிரோதமானது (ஹவாலா) என்றும் இந்த அமைப்பினர் புகார் கூறியுள்ளனர்.

விசாரணைக்கு தயாராக உள்ளதாகவும், கேஜ்ரிவால் கூறியிருந்தார்.

இதுகுறித்து திக்விஜய் சிங் இணையதளமான ட்விட்டரில், “ஆம் ஆத்மி கட்சியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவதற்காக பாஜகவினர் இதுபோன்ற சதித் திட்டத்தை தீட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நடவடிக்கை எடுக்கலாமே. நான் கேஜ்ரிவாலின் அபிமானி அல்ல. ஆனாலும், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கலாம் என கேஜ்ரிவால் பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளது சரியானது” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT