‘‘சென்னை, மும்பை உட்பட நாட்டின் 12 துறைமுகங்களில், ரூ.50 ஆயிரம் கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப் படும்’’ என்று மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
மத்தியில் பாஜக ஆட்சி பொறுப் பேற்றதும், நாட்டில் அனைத்து வசதிகளும் கொண்ட ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தது. அதற்கான செயல் திட்டங்கள், கொள்கைகளை மத்திய அரசு தீவிரமாக உருவாக்கி வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் நகரங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கூறிய தாவது:
நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகப் பகுதியில் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும். கண்ட்லா, மும்பை, ஜேஎன்பிடி, மர்மகோவா, நியூ மங்க ளூரு, கொச்சி, சென்னை, எண் ணூர், வ.உ.சிதம்பரனார், விசாகப் பட்டினம், பிரதீப், கொல்கத்தா (ஹால்டியாவுடன் சேர்த்து) ஆகிய துறைமுகப் பகுதிகளில் ஸ்மார்ட் நகரம் உருவாக்கப்படும். ஒவ்வொரு துறைமுகமும் ரூ.3,000 கோடியில் இருந்து ரூ.4,000 கோடி செலவில் ஒரு ஸ்மார்ட் நகரத்தை உருவாக்கும்.
இந்த ஸ்மார்ட் நகரங்கள், பசுமை நகரங்களாக விளங்கும். இதற் கான பணிகள் 6 மாதங்க ளுக்குள் தொடங்கும். ஐந்து ஆண்டு களுக்குள் இந்த ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கி முடிக்கப்படும்.
மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள இந்த 12 துறைமுகங்களுக்குச் சொந்தமாக 2.64 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வந்துள்ளது. இவற்றில் மும்பை துறைமுகத்துக்கு மட்டும் 752 எக்டேர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.46 ஆயிரம் கோடி.
ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் அரசு நிலங்களை கண்டறிந்துள் ளோம். இந்த நிலங்களை பில்டர் களுக்கு விற்க மாட்டோம். மத்திய அரசே ஸ்மார்ட் நகரங் களை உருவாக்கும். இவற்றை உரு வாக்கும் திட்டத்தில் வீடுகள் கட்டித்தர தனியார் நிறுவனங்க ளுக்கு அழைப்பு விடுக்கப்படும். மேலும், தனியார் முதலீடும் இத்திட்டத்துக்காகப் பெறப்படும்.
சர்வதேச தரத்துடன் அகலமான சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டலம், கப்பல் உடைக்கும் மற்றும் கட்டும் மையங்கள், துறைமுகத்தில் சேரும் கழிவுகள் மூலம் பயோ காஸ் தயாரிக்கும் வசதி, சூரிய சக்தி, காற்றாலை மூலம் மின்சாரம் போன்ற எல்லா அம்சங்களும் ஸ்மார்ட் நகரத்தில் இருக்கும்.
சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் இந்நகரங்கள் இருக்கும். மின்சாரத்தில் இயங் கும் வாகனங்கள் இங்கு ஓடும். இந்நகரங்களில் பள்ளிகள், வர்த்தக மால்கள் உட்பட பல வசதி கள் ஏற்படுத்தித் தரப்படும்.
இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்