இந்தியா

டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் மீது மர்ம நபர் தாக்குதல்

செய்திப்பிரிவு

டெல்லியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தினார்.

தெற்கு டெல்லிக்கு உட்பட்ட தக்‌ஷினாபுரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கேஜ்ரிவால் அங்கு கூடியிருந்தவர்களிடம் கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் பின்னால் இருந்து பாய்ந்த மர்ம நபர், கேஜ்ரிவால் முதுகில் கடுமையாக தாக்கினார். தொடர்ந்து அவரை கண்ணத்தில் தாக்கவும் முற்பட்டார்.

ஆனால் அதற்குள் அந்த மர்ம நபரை ஆம் ஆத்மி தொண்டர்கள் மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர்.

அப்போது குறுக்கிட்ட கேஜ்ரிவால், "சிலர் பிரதமர் பதவியை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்றனர். அவர்கள் விரும்புவதை செய்யட்டும். ஆனால் எங்கள் மதம் அஹிம்சையை போதிக்கிறது. கைகள் ஓங்கினால் இந்த பேரியக்கம் முடிவுக்கு வந்துவிடும். எனவே, தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT