இந்தியா

ரயில்வே பட்ஜெட் அதிருப்பதியளிக்கிறது: சிவசேனா

பிடிஐ

ரயில்வே பட்ஜெட் அதிருப்தியளிக்கிறது என தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கும் அமைச்சர் அதற்கான நிதி ஆதாரம் எது என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை எனவும் சிவசேனா கூறியுள்ளது.

மும்பை வட-மேற்கு தொகுதி சிவ சேனா எம்.பி. கஞ்சனன் கீர்த்திகர் கூறும்போது, "மத்திய ரயில்வே பட்ஜெட் அறிவிப்பு முழுமையாக அதிருப்தியளிக்கிறது. பட்ஜெட்டில் நிறைய பேசியிருக்கிறார்களே தவிர அவற்றை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் குறித்து தெளிவாக ஏதும் கூறவில்லை. விவரங்கள், விளக்கங்கள் பட்ஜெட்டில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன" என்றார்.

இதேபோல், அவுரங்காபாத் சிவ சேனா எம்.பி. சந்திரகாந்த் காய்ரே கூறும்போது, "பட்ஜெட் நன்றாக இருக்கிறது. ஆனால், புரிந்து கொள்வதற்குத்தான் சிரமமாக இருக்கிறது. எனது மாநில மக்கள், பட்ஜெட்டில் நமக்கான அறிவிப்பு என்னவென்று கேட்கும்போது சொல்வதற்கு ஒன்றும் இல்லையே?" எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT