முசாபர் நகர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குன்வார் பால் என்பவருக்கு ஜாமீன் வழங்க நீதி மன்றம் மறுத்துவிட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் பகுதியில் கடந்த ஆண்டு நடந்த வகுப்புக் கலவரத் தில் 50-க்கும் மேற்பட்டோர் கொல் லப்பட்டனர். இதில் குத்பா என்ற கிராமத்தில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதில் குன்வார் பால் என்ப வரின் ஜாமீன் மனுவை முசாபர் நகர் மாவட்ட நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
குத்பா கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்த கலவரத்தில் ஒரு பெண் உள்பட 8 பேர் கொல்லப் பட்டனர்