இந்தியா

தெளிவான தொலைநோக்குப் பார்வையுடைய சிறந்த பட்ஜெட்: மோடி புகழாரம்

செய்திப்பிரிவு

மத்திய பட்ஜெட் 2015-16, தெளிவான தொலைநோக்குப் பார்வையுடைய சிறந்த பட்ஜெட்டாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: "மத்திய பட்ஜெட் 2015-16, தெளிவான தொலைநோக்குப் பார்வையுடைய சிறந்த பட்ஜெட்.

நமது தேசத்தின் பொருளாதார வளர்ச்சிப் பொறிக்கு இந்த பட்ஜெட் தேவையான சக்தியை நல்கும்.

ஏழைகள், நடுத்தர மக்கள் நலன் சார்ந்த, வளர்ச்சிக்கு வித்திடும் புதிய திருப்புமுனைகள் கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் ஜேட்லியை பாராட்ட வேண்டும்.

பட்ஜெட்டில் விவசாயிகள், இளைஞர்கள் நலனுக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பு தொடர்பான அனைத்துச் சந்தேகங்களையும் கலையும் வகையில் பட்ஜெட் உள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் இந்தியாவில் நிலையான, நியாயமான, யூகிக்கக்கூடிய வரிவிதிப்பே இருக்கிறது என்ற நம்பிக்கை

முதலீட்டாளர்கள் மத்தியில் உதயமாகும். இந்த பட்ஜெட், முதலீட்டாளர்கள் வரவேற்கும் பட்ஜெட்டாக இருக்கிறது.இது அனைவருக்குமான பட்ஜெட்" என தெரிவித்துள்ளார்.

#SabkaBudget என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி மோடி ட்வீட் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT