ஹைதராபாத் போக்குவரத்து போலீஸாருக்கு உடையில் அணிந்துகொள்ளக்கூடிய கேம ராக்களை வழங்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இத்துறையின் மேம்பாட்டுக்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஹைதராபாத் நகரில் போக்கு வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ‘ஸ்மார்ட் போலீஸிங்’ என்ற பெயரில் போக்குவரத்து போலீஸ் துறை நவீனப்படுத்தப்பட்டு வரு கிறது. இதற்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இப் போது ஹைதராபாத் போக்கு வரத்து போலீஸாருக்கு சோதனை முயற்சியாக, உடையில் பொருத் தக்கூடிய 4 கேமாரக்கள் வழங்கப் பட்டுள்ளன. எஸ்ஐ பொறுப்பில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட் டுள்ள இந்த கேமரா ஒவ்வொன்றும் ரூ.1.5 லட்சம் மதிப்பு கொண்டதா கும். வரும் மார்ச் மாதம் இறுதிக் குள் இதுபோன்ற 100 கேமராக் களை போலீஸாருக்கு வழங்க தெலங்கானா அரசு திட்டமிட் டுள்ளது.
ஜிபிஆர் எஸ் வசதி கொண்ட இந்தக் கேமராவை பொருத்தி உள்ள போலீஸ் அதிகாரி பணியில் இருக்கும் இடத்தில் நடைபெறும் செயலை, போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கொண்டு நேரடி யாகப் பார்க்க இயலும். இந்த கேமரா மெமரி கார்ட், 4ஜி இன்டெர்நெட் ஆகிய வசதிகளைக் கொண்டதாகும்.
போக்குவரத்து விதியை மீறு பவர்கள் ஆன்லைன் மூலம் அபராதத்தை செலுத்தும் வசதியை ஹைதராபாத் போக்குவரத்து போலீஸார் ஏற்படுத்தி உள்ளனர். இதுவரை 10 ஆயிரம் பேரிடம் அபராத தொகையாக ஆன்லைன் மூலம் ரூ.19 லட்சம் வசூலிக்கப்பட் டுள்ளதாக ஹைதராபாத் போக்கு வரத்து காவல் துறை துணை ஆணையர் ஜித்தேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.