இந்திய கலாச்சாரத்தின் புராதன சின்னமாக ராமர் பாலம் திகழ்கிறது. அப்பகுதியில் ஏராளமான தோரிய கனிம வளம் உள்ளது. எனவே, இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு சேது சமுத்திரத் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.
உள்ளுர் தொழில்கள் பாதிக்காத வகையில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வருமான வரி விதிப்பு எளி மைப்படுத்தப்படும்.
தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். புல்லட் ரயில் கள் இயங்கும் வகையில் நகரங்களுக்கு இடையே வைர நாற்கரத் திட்டம் கொண்டு வரப்படும்.
தேசிய அளவிலான பதுக்கல், கள்ளச் சந்தை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். விலை வாசியை நிலைப்படுத்தி கண்காணிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும். விவசாய தேசிய சந்தை அமைக்கப்படும்.
ஊழலை ஒழிக்கவும், வெளி நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கிவைக்கப் பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய, மாநில அரசுகளிடையே இணக்கமான உறவை பராமரிக்கவும், மாநிலங்கள் இடையே பிராந்திய கவுன்சிலை உருவாக்கி பொதுவான பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிபதிகளை நியமிக்க தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்படும். நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு செய்ய சட்ட மியற்றப்படும். மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறைக்கு முடிவு கட்டப்படும். குறைந்த விலை வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
முஸ்லிம் மதத்தினரின் மதரஸாக்களை நவீனப்படுத்தவும், வக்பு வாரியத்தை சீர மைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். உருது வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம், மத நல்லிணக்கத்துக்கான ஆலோசனை அமைப்பு ஆகியவை கொண்டு வரப்படும். மதரஸாக்களில் கணிதம், அறிவியல் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்.பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல், நிர்வாக முடக்கத்துக்கு முடிவு கட்டுதல், தொழில்துறை ஒப்புதல்களுக்கு ஒற்றைச்சாளர முறையை கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.
இந்தியாவுக்கு முதலிடம் என்பதே அரசின் கொள்கையாகவும், மதமாகவும் இருக்கும்.
மக்களின் நலனே அரசின் பிரார்த்தனையாக இருக்கும். ஒரே இந்தியா, வளமான இந்தியா என்பதே பாஜகவின் கோஷம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.