இந்தியா

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், இது வலுவடைய வாய்ப்பில்லை என்றும் கன மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ கத்தின் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழகத்தில் நேற்று குறைந்த அளவு வெப்பமே பதிவானது. சேலத்தில் அதிக பட்சமாக 90.68 டிகிரி பதிவானது. திருப்பத்தூரில் 90.32 டிகிரி, மதுரையில் 89.6 டிகிரி, வேலூரில் 88.16 டிகிரி, சென்னையில் 84.92 டிகிரி பதிவாகியிருந்தது.

SCROLL FOR NEXT