இந்தியா

இந்தியாவில் ஒபாமா:கவனத்தை ஈர்த்த பயணம் - மிஷெலுக்கு இந்தியர் வடிவமைத்த ஆடை

செய்திப்பிரிவு

ஒபாமாவுடன் டெல்லி வந்திறங்கிய மிஷெல், இளம் நீல நிறத்தில் பூப்போட்ட மேலாடையும், கருப்பு நிறத்தில் வெள்ளை கோடுகள் கொண்ட அரை பாவாடையும் அணிந்திருந்தார்.

அவரது தோற்றத்துக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இருந்த இந்த ஆடையை பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் பிபு மொஹபத்ரா வடிவமைத்திருந்திருந்தார்.

நியூயார்க்கில் வசிக்கும் மொஹபத்ரா, ஒடிசா மாநிலத்தின், ரூர்கேலா நகரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் இதற்கு முன் மிஷெலுக்கும், பாலிவுட் நட்சத்திரங்கள் பலருக்கும் ஆடை வடிவமைத்துள்ளார்.

SCROLL FOR NEXT