அவசர சட்டம் அடிக்கடி பிறப் பிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சி களும் இணைந்து நடை முறைக்கு சாத்தியமான ஒரு தீர்வினை எட்டவேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, அடுத்தடுத்து அவசரச் சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தப் பின்னணியில் பிரணாப் இவ்வாறு கூறியுள்ளார்.
“அசாதாரண சூழ்நிலையில் அவசரச்சட்டம் பிறப்பிக்க அரசிய லமைப்புச் சட்டம் வழி செய்துள்ளது. ஆனால் இந்த வழியை வழக்க மான சட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது” என்றும் அவர் கூறி யுள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர் களிடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரணாப் நேற்று உரை யாற்றினார்.
அப்போது மத்திய அரசின் தொடர்ச்சியான அவசரச் சட்டங்கள் குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பிரணாப் அளித்த பதில் வருமாறு:
மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத போது, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின் மூலம் சட்டங்களை நிறைவேற்றலாம் என்பது நடை முறைக்கு சாத்தியம் இல்லாதது.
இந்த சூழ்நிலையில் நடை முறைக்கு சாத்தியமாக ஒரு தீர்வினை எட்டும் பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு அவையில் பெரும்பான்மை இருக்கும்போது அவை மசோதாக்களை எதிர்க்க லாம், குறைகளை வெளிப்படுத்த லாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் சட்டம் இயற்றுவதில், நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் ஆனா லும் சரி, மறைமுகமாக தேர்ந் தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர் ஆனாலும் சரி, அனை வருக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.
எனவே பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும் என அரசியல் கட்சிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரணாப் கூறினார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடருக்குப் பிறகு நரேந்திர மோடி தலைமையி லான அரசு, காப்பீட்டுத் துறை யில் அந்நிய நேரடி முதலீடு உச்ச வரம்பு உயர்வு உட்பட 9 அவசரச் சட்டங்களை பிறப்பித் துள்ளது. இந்நிலையில் குடிய ரசுத் தலைவரின் கருத்து முக்கி யத்துவம் பெறுகிறது.