இந்தியா

கர்நாடகாவில் அமைச்சர் பதவி கேட்டு 30 எம்எல்ஏ-க்கள் டெல்லிக்கு பயணம்: முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி

இரா.வினோத்

பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடகாவில் அமைச்​சர் பதவி கேட்டு 30 காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் டெல்​லி​யில் முகாமிட்டுள்ளனர்.

கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் ஆட்​சிக்கு வந்து இரண்​டரை ஆண்​டு​கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார் முதல்​வர் பதவி கேட்டு போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளார். அவரது ஆதரவு எம்​எல்​ஏக்​கள் முதல்​வர் சித்​த​ராமை​யா​வுக்கு எதி​ராக பேசிவரு​வ​தால் காங்​கிரஸ் மேலிடத்​துக்கு நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது.

          

இந்​நிலை​யில் காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் ரிஸ்​வான் அர்​ஷத், லட்​சுமண் சவதி, சுப்பா ரெட்​டி, சிவண்​ணா, வினய் குல்​கர்னி உள்​ளிட்ட 30 பேர் நேற்று முன்தினம் டெல்​லிக்கு ஒரே விமானத்​தில் சென்​றனர்.

அங்கு அவர்​கள் காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்​கே, மூத்த தலை​வர் சோனியா காந்​தி, மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி உள்ளிட்டோரை சந்​தித்து பேச திட்​ட​மிட்​டுள்​ள‌னர்.

இதுகுறித்து காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் தரப்​பில் கூறுகை​யில், ‘‘காங்​கிரஸ் ஆட்சி பொறுப்​பேற்று இரண்​டரை ஆண்​டு​கள் நிறைவடைந்து விட்​டது. எங்​களுக்கு பதவி கிடைக்​காத​தால் தொகுதி மக்​களின் முன்​னேற்​றத்​துக்கு எதை​யும் செய்ய முடிய​வில்​லை. எனவே அனை​வருக்​கும் வாய்ப்பு தரும் வகை​யில், சரி​யாக செயல்​ப​டாத அமைச்​சர்​களை நீக்​கி​விட்டு எங்​களுக்கு அமைச்​சர் பதவி வழங்க வேண்​டும்” என்றனர்.

காங்​கிரஸ் மேலிட வட்​டாரத்​தில் விசா​ரித்தபோது, ‘‘5 மாநில தேர்​தல் முடிவு​களுக்கு பிறகு கர்​நாடக அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்​யப்​படும். அமைச்​சர் பதவிக்கு யார் வேண்​டு​மா​னாலும் ஆசைப்​படலாம். அதற்​கான சூழலைப் பொறுத்து பதவி​கள் வழங்​கப்​படும்'' என்றனர்.

கர்​நாடக காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​களின் போர்க்​கொடி​யால் முதல்​வர் சித்​த​ராமை​யா​வுக்​கு கடும்​ நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT