இந்தியா

தீ​விர​வா​தி​களைப் புகழ்ந்து புத்தகம் அச்சிட்டதால் ஜம்மு காஷ்மீரில் 3 பதிப்​பாளர்​கள் கைது

ஆசிரியரை தேடி ராஜஸ்​தான் சென்ற விசா​ரணைக் குழு

செய்திப்பிரிவு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ‘லெஜண்ட்ஸ் அண்ட் பெர்​ச​னாலிட்​டிஸ் ஆஃப் ஜம்மு அண்ட் காஷ்மீர்’ என்ற புத்​தகம் சமீபத்​தில் வெளியானது. தீவிர​வா​தி​கள் மற்​றும் பிரி​வினை​வா​தி​களைப் பெரு​மைப்​படுத்​தும் வகை​யிலும், தீவிர​வாத சித்​தாந்​தங்​களை நியாயப்​படுத்​தும் வகை​யிலும் இந்த புத்​தகம் எழுதப்பட்டுள்ளதாகக் குற்​றம்சாட்​டப்​பட்​டுள்​ளது.

இதையடுத்​து, இந்த புத்​தகத்தை அச்​சிட்டு புழக்​கத்​தில் விட்​டது தொடர்​பாக மூன்று பதிப்​பாளர்​களை ஜம்​மு​வின் உளவுத்​துறை பிரிவு (சிஐஜெ) கைது செய்​துள்​ளது. கைதானவர்​களில் இரு​வர் டெல்​லியைச் சேர்ந்​தவர்​கள் என்​றும் ஒரு​வர் ஜம்​முவைச் சேர்ந்தவர் என்​றும் தெரிய ​வந்​துள்​ளது. இந்த மூன்று பதிப்பாளர்களும், காவலில் எடுக்​கப்​படு​வதற்கு முன்பு விசாரணைக்​காக வரவழைக்​கப்​பட்​டனர்.

டெல்​லியைச் சேர்ந்த பதிப்​பாளர்​களில் ஒரு​வர், இந்த வெளி​யீடு தொடர்​பான டிஜிட்​டல் ஆவணங்​களை அழித்து ஆதா​ரங்​களை மறைக்க முயன்​ற​தாகக் கூறப்​படு​கிறது. இருப்​பினும், விசாரணையின்​போது புல​னாய்​வாளர்​கள் முக்​கி​யத் தரவு​களை மீட்​டெடுத்​தனர்.

டெல்லி மற்​றும் ஜம்​மு​வில் உள்ள பதிப்​பகங்​களில் சிஐஜெ குழுக்கள் சோதனை நடத்​தி, புத்​தகத்​தின் அச்​சிடு​தல், விநியோகம் மற்​றும் சப்ளை தொடர்​பான ஆவணங்​களைக் கைப்பற்​றிய சில நாட்​களி​லேயே இந்த கைது நடவடிக்​கைகள் மேற்கொள்​ளப்​பட்​டுள்​ளன.

இந்த விசா​ரணை​யின் ஒரு பகு​தி​யாக, புத்​தகத்​தின் ஆசிரியர்களில் ஒரு​வ​ரான சந்​தோஷ் மீனா என்​பவரிடம் விசாரணை நடத்து​வதற்​காக சிஐஜெ குழு ராஜஸ்​தான் சென்றுள்ளது. மற்றொரு ஆசிரிய​ரான ஹிலால் அகமது என்பவரை இன்​னும் கண்​டு​பிடிக்க முடிய​வில்லை என்று அந்த வட்​டாரங்​கள் தெரிவிக்கின்​றன.

இது தொடர்​பாக கல்​வித் துறையைச் சேர்ந்த 8 அதி​காரி​கள் ஏற்கெனவே பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்த புத்தகத்தை வெளி​யிடு​தல், அச்​சிடு​தல் மற்​றும் விளம்பரப்படுத்துதலில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது சட்​ட​விரோத நடவடிக்​கைகள் தடுப்​புச் சட்​டத்​தின் (யுஏபிஏ) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

சையத் அலி ஷா கிலானி, மஸ்​ரத் ஆலம் மற்​றும் மிர்​வைஸ் உமர் ஃபரூக் உள்​ளிட்ட பிரி​வினை​வா​தி​களை ஜம்மு காஷ்மீரின் ‘சிறந்த ஆளு​மை​கள்’ என்று இந்​த புத்​தகம்​ விவரித்​துள்​ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT