கொல்கத்தா: கொல்கத்தாவின் தரதலா பகுதியில் உள்ள பிரேஸ் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது.
நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில், மூன்று அடுக்குக் கிடங்கின் மூன்றாவது தளத்தில் கூரை அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, திடீரென அந்தக் கட்டடிம் நிலை குலைந்து கீழே விழுந்தது. இதில், கட்டுமானத் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 18 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 18 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணி தொடர்கிறது.