இந்தியா

சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முயன்ற 3 இந்தியர்கள் எத்தியோப்பியாவில் கடத்தல்: ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சட்​ட​விரோத​மாக அமெரிக்கா செல்ல முயன்ற 3 இந்தியர்கள் எத்​தி​யோப்​பி​யா​வில் கடத்​தப்​பட்​டுள்​ளனர். அவர்களை விடுவிக்க ரூ.1 கோடி கேட்டு மிரட்​டல் வந்​துள்​ளது.

குஜ​ராத்​தைச் சேர்ந்த ரித்விக் ஜன்​சா​ரி, மம்தா சாவ்​டா, மயூரி ஆகிய மூவரும் உறவினர்​கள். மம்​தா​வின் கணவர் சிராக் குமார் 6 மாதங்களுக்கு முன்பு மாணவர் விசா​வில் அமெரிக்கா சென்​று​விட்​டார். ஆனால் மம்​தாவுக்கு அமெரிக்க விசா கிடைக்​க​வில்​லை. அதையடுத்து மம்​தா​வின் குடும்​பத்​தினர் இடைத்​தரகர்​கள் மூலம் சட்​ட​விரோத வழி​யில் அவர்​களை அனுப்ப ஏற்​பாடு செய்​தனர்.

மெஹ்​சா​னாவைச் சேர்ந்த ஏஜெண்ட் அல்​பேஷ் பஞ்​சால், வதோதரா ஏஜெண்ட் ஆகியோர் இந்​தப் பயணத்தை ஏற்​பாடு செய்​தனர். ஒரு​வருக்கு ரூ.75 லட்​சம் எனப் பேசப்​பட்​டது. அதில் ரூ.70 லட்​சம் வரை செலுத்​தப்​பட்​ட​தாகக் குடும்​பத்​தினர் கூறுகின்றனர். செப்​டம்​பர் 20-ம் தேதி மூவரும் குஜ​ராத்​தில் இருந்து புறப்​பட்​டனர்.

ராஜஸ்​தான் வழி​யாக ஜெய்ப்​பூர் சென்​று, அங்​கிருந்து எட்​டிஹாட் விமானத்​தில் அபு​தாபி சென்​று, பின்​னர் எத்​தி​யோப்​பி​யா​வின் அடிஸ் அபா​பாவை அடைந்​தனர். அங்கு ஒரு முகாமில் தங்கியிருந்தனர். அவர்​களிடம் செப்​டம்​பர் 19 முதல் அக்​டோபர் 19 வரை செல்​லுபடி​யாகும் இ-விசா இருந்​தது.

செப்​டம்​பர் 22-ம் தேதி, கனடா சென்று விட்​ட​தாக மம்தா தன் தந்தை​யிடம் தொலைபேசி​யில் கூறி​னார். அதன்​பிறகு அவர்களிடம் பேச முடிய​வில்​லை.

இந்​நிலை​யில் `கான்' என்​பவர் குடும்​பத்​தினரை அழைத்​து, மூவரை​யும் பிணைக் கைதி​களாக வைத்​திருப்​ப​தாக​வும், விடுவிக்க ரூ.1 கோடி வேண்​டும் என்​றும் மிரட்டி உள்ளார். கடத்​தல்​காரர்​களுக்கு ஏற்​கெனவே ரூ.60 லட்​சம் கொடுக்​கப்​பட்ட பின்​னரும் இன்​னும் ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாகக் குடும்​பத்​தினரும் ஏஜெண்​டும் கூறுகின்​றனர்.

அரசுக்கு கோரிக்கை

"எங்​களிடம் பணம் இல்​லை. எங்​கள் பிள்​ளை​களைப் பத்​திர​மாக மீட்​டுத் தர வேண்​டும்" என்று மம்​தா​வின் தந்தை கிரீட்​பாய் சவுகான் அரசுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளார். மம்​தா​வின் தந்தை, காணாமல் போனோர் குறித்து லாங்க்​னாஜ் காவல் நிலையத்​தில் செப்​டம்​பர் 29-ம் தேதி​யன்று புகார் ஒன்​றைப் பதிவு செய்​தார். மூவரின் இருப்​பிடம் இன்​னும் தெரிய​வில்லை என்​றும், வி​சா​ரணை நடந்து வரு​வ​தாக​வும் காவல் ஆய்​வாளர்​ ஏ.எம்​. கெலாட்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT