சித்தூர்: பெங்களூரு - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், சித்தூர் மாவட்டம், பங்காருபாளையம் அருகே சேஷாபுரத்தில் ஆந்திர அரசுப் பேருந்து ஒன்று பழுதடைந்தது. இதனால் அந்தப் பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சித்தூர் நோக்கி வேகமாக வந்த ஒரு கார், இந்தப் பேருந்தின் பின்புறத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த தெலங்கானா மாநிலம், வாரங்கலைச் சேர்ந்த தர் பாபு, லட்சுமி, அத்விகா ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக பங்காரு பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.