இந்தியா

‘டிஜிட்டல் அரஸ்ட்’ மூலம் 71 வயது முதியவரிடம் ரூ.2 கோடி மோசடி: ஹைதராபாத்தில் 3 பேர் கைது

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மூலம் ரூ.2 கோடி மோசடி செய்த 3 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

ஹைத​ரா​பாத்தை சேர்ந்த 71 வயது முதி​ய​வருக்கு ஒரு வீடியோ தொலைபேசி அழைப்பு வந்​துள்​ளது. அதில் பேசி​ய​வர் தான் சிபிஐ அதி​காரி என்​றும் ஆதார் எண்ணை முறை​கே​டாகப் பயன்​படுத்​தி​யது தொடர்​பாக அவர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது என்றும் மிரட்​டி​யுள்​ளனர். அதை கேட்டு முதி​ய​வர் அதிர்ச்சி அடைந்​துள்​ளார். பின்​னர், மோசடி கும்​பல் போலி எப்​ஐஆர் நகலை​யும், மும்​பை​யில் ஆதார் எண்ணை தவறாகப் பயன்​படுத்தி கனரா வங்​கி​யில் கணக்கு தொடங்​கியதற்​கான நகல், ஏடிஎம் கார்டு போன்​றவற்றை வீடியோ​வில் காண்​பித்​துள்​ளனர்.

பின்​னர் வழக்​கில் இருந்து விடுவிக்​க​வும், கைது நடவடிக்​கை​யில் இருந்து தப்​பிக்​க​வும் தாங்​கள் சொல்​லும் வங்​கிக் கணக்​கு​களுக்கு பணம் அனுப்​பும்​படி கூறி​யுள்​ளது. ‘டிஜிட்​டல் அரஸ்ட்​’டில் சிக்​கிய முதி​ய​வர் அவர்​கள் கூறியபடி பணத்தை அனுப்​பி​னார்.

கடந்த நவம்​பர் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை​யில் ரூ.1 கோடியே 92 லட்​சத்து 50,070-ஐ முதி​ய​வர் அனுப்​பி​யுள்​ளார். அதன்​பிறகு தான் ஏமாற்​றப்​பட்​டதை அறிந்து சைபர் கிரைம் போலீ​ஸில் புகார் அளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து தீவிர விசா​ரணை நடத்​தினர். பின்​னர் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த பண்டு வினித் ராஜ் ஜி, திருப்​ப​தைய்​யா, கவுனி விஸ்​வ​நாதம் ஆகிய 3 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில் தெலங்​கானா உட்பட நாட்​டின் 5 பகு​தி​களில் இவர்​கள் இது​போல் சைபர் மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளது தெரிய வந்​துள்​ளது.

இந்த மோசடி​யில் முக்​கிய குற்​ற​வாளி சந்​தீப் என்​கிற அலெக்​ஸ் தலைமறை​வாகி உள்​ளார். அவரை போலீ​ஸார்​ தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT